×

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசாணைகளை உடனே செயல்படுத்த வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு அரசாணைகளை வெளியிட்டுள்ள அரசு எந்தவொரு ஆணையையும் செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டினை தமிழக மாற்றுத் திறனாளிகள் சட்டப் பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக அரசு வளாகங்களில் ஆவின் பாலகம் அமைக்க இடம் ஒதுக்குவது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்கள் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டைகளில் 5 விழுக்காடு இடம் ஒதுக்குவது,பகுதிநேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை நிரந்தரம் செய்வது உள்ளிட்ட அனைத்து அரசாணைகளையும் அரசு செயல்படுத்தவில்லை.

மாற்றுத் திறனாளிகளை சுயமரியாதையாக வாழச்செய்வது என்பது வெறும் காகிதத்தில் இருந்தால் போதாது. அவைகள் எல்லாம் செயல்பாட்டிற்கு வரவேண்டும். எனவே மாற்றுத் திறனாளிகளின் அரசாணைகளை அரசு உடனே செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கான அரசாணைகளை உடனே செயல்படுத்த வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : OPS ,Chennai ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Tamil Nadu Disabled ,Persons ,Legal Protection Movement ,Dinakaran ,
× RELATED ஓபிஎஸ் வலியுறுத்தல் சொத்து வரி...