×

ரூ.7,800 கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: ரூ.7,800 கோடியில் பல்வேறு ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ராணுவ தளவாட கொள்முதல் குழு கூட்டம், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், ரூ.7,800 கோடி மதிப்பிலான பல்வேறு ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, விமானப்படையின் செயல்திறனை அதிகரிக்க, எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டர்களில் எலக்ட்ரானிக் போர்கருவிகளை வாங்கவும், அவற்றை நிறுவவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கருவிகள் பெல் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட உள்ளது.

இதே போல, இலகுரக இயந்திர துப்பாக்கி, கடற்படையின் எம்எச்-60ஆர் ஹெலிகாப்டருக்கான ஆயுதங்கள், ஆளில்லா கண்காணிப்பு, வெடிமருந்துகள், எரிபொருள் வழங்குதல் மற்றும் போர்க்களத்தில் காயமடைந்தவர்களை மீட்பதற்கு உதவும் தானியங்கி கவச வாகனங்கள் ஆகியவற்றை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புராஜெக்ட் சக்தி திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளை வாங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல்கள் அனைத்தும் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே பெறப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ரூ.7,800 கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: ஒன்றிய அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Union government ,New Delhi ,Union Defense Ministry ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் மாநிலம் தவுபால் பகுதியில் லேசான நிலநடுக்கம்