![]()
டெல்லி: மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் மனு அளித்தனர். மணிப்பூர் சென்று வந்த இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், அங்குள்ள நிலவரம் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கினர். மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த பின் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேட்டியளித்துள்ளனர் அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக எம்.பி.திருச்சி சிவா பேசியதாவது
மணிப்பூர் விவகாரம் – ஜனாதிபதி எந்த உறுதியும் தரவில்லை: திருமாவளவன்
மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், பரிசீலிக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை தொடர்பாக எந்த உறுதியும் தெரிவிக்கவில்லை. மணிப்பூருக்கு பிரதமர் செல்ல வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்தோம் எனவும் அவர் பேசினார்.
பிரதமர் பேசாதது பற்றி ஜனாதிபதியிடம் முறையிட்டோம்: திருச்சி சிவா
நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசாதது குறித்து ஜனாதிபதியிடம் முறையிட்டோம் என திமுக எம்.பி.திருச்சி சிவா தெரிவித்தார். மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். மணிப்பூர் வன்முறையில் 5,000 பேர் படுகாயம்; 75,000 பேர் காடுகளில், நிவாரண முகாமில் இருக்கிறார்கள். இந்தியா கூட்டணி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். மணிப்பூர் கலவரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் விளக்கம் தராததால் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன எனவும் அவர் பேசியுள்ளார்.
The post ஜனாதிபதியை சந்தித்தபின் இந்தியா கூட்டணி தலைவர்கள் திருமாவளவன், திருச்சி சிவா பேட்டி..!! appeared first on Dinakaran.
