×

பொன்மலை பணிமனையில் இருந்து புதுப்பொலிவுடன் திரும்பிய ஊட்டி மலை ரயில் இன்ஜின்..!

நீலகிரி: பொன்மலை ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஊட்டி மலை ரயில் இன்ஜின் குன்னூருக்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது. பாரம்பரிய பெருமைமிக்க ஊட்டி மலை ரயில் நூறாண்டுகளுக்கு மேல் மலையில் கண்கவர் வண்ணங்களுடன் உதகையின் அழகை ஒருசேர பயணிகள் கண்டுகளிப்பதற்கு பெரிதும் உதவி வருகிறது. சிறப்புமிக்க இந்த ரயிலின் இன்ஜின்கள் திருச்சி ரயில்வே பொன்மலை பணிமனையில் தயாரிக்கப்பட்டவை.

நிலக்கரி மூலம் இயக்கப்பட்ட இந்த இன்ஜின்கள், ஸ்டார்ட் செய்வதற்காக பர்னஸ் ஆயில் பயன் படுத்தப்பட்டது. அதன்பின்னர், டீசல், பயோ டீசல்,குருடுஆயில்உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. தற்போது சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு இன்ஜின் ஸ்டார்ட் செய்வது முதல், தொடர்ந்து இயக்கப்படுவது வரை முழுக்க முழுக்க பாஸ்ட் டீசல் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரயில் இன்ஜின் ஒன்று கடந்த டிசம்பர் மாதம் பராமரிப்புப் பணிக்காக பொன்மனை பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பொன்மலை முதன்மை பணிமனை மேலாளர் சந்தோஷ்குமார் பாட்ரா தலைமையில் பணிகள் நடைபெற்றது. அதிகபட்சமாக ஒன்பது மாதங்கள் வரை நடைபெறும் பராமரிப்புப் பணிகள், பொன்மனை ரயில்வே ஊழியர்களின் சமயோசித உழைப்பு காரணமாக தற்போது 6 மாதத்தில் முடிவுற்றுள்ளன. பொன்மலை பணிமனையில் இருந்து புதுப்பொலிவுடன் ரயில் இன்ஜின் லாரி மூலம் ஊட்டிக்கு சென்றது.

The post பொன்மலை பணிமனையில் இருந்து புதுப்பொலிவுடன் திரும்பிய ஊட்டி மலை ரயில் இன்ஜின்..! appeared first on Dinakaran.

Tags : Hill ,Ponmalai Workshop ,Ooty Hill Train Engine ,Ponmalai Railway Workshop ,Coonoor ,Ooty Hill Train ,Ooty ,Ooty Hill ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...