×

மாசு கட்டுப்பாடு வாரியத்தின் என்விரோ சால்வர் ஹேக்கத்தான்

சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் கருப்பொருள்களை மையமாகக் கொண்டு என்விரோ சால்வர் ஹேக்கத்தான் நடைபெற உள்ளது. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறைக்கான கருப்பொருள்கள் மக்களைச் சென்றடைவதற்கு ஏதுவாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் காணொலிகளை பதிவேற்றம் செய்கிறது. மே 5ம் தேதி முதல் 31ம் தேதி வரை தண்ணீர் சேமித்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைத்தல் ஆகிய இரண்டு கருப்பொருள்களில் ஒரு வாரம் நீடிக்கும் ஹேக்கத்தான் நடத்த முன்வந்துள்ளது.

வெற்றி பெறுபவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிற்கும் 5 பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ. 3 லட்சம், 2வது பரிசு ரூ. 2 லட்சம் மற்றும் 3 வது பரிசு 3 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ஜூன் 5, 2023 உலக சுற்றுச்சூழல் தினத்தன்று வழங்கப்படும். ஹேக்கத்தான் பற்றிய விவரங்களை www.tnpcb.gov.in இணையதளத்தில் அறியலாம் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாசு கட்டுப்பாடு வாரியத்தின் என்விரோ சால்வர் ஹேக்கத்தான் appeared first on Dinakaran.

Tags : Enviro Salvar Hackathon ,Pollution Control Board ,Chennai ,Tamil Nadu Pollution Control Board ,Enviro Salver Hackathon ,Dinakaran ,
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...