×

ரூ.100 கோடி நில அபகரிப்பு தொடர்பான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் கைது

கரூர்: ரூ.100 கோடி நில அபகரிப்பு தொடர்பான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.100 கோடி நில அபகரிப்பு தொடர்பான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக இருந்த பிரித்விராஜை சிபிசிஐடி போலீஸ் கரூரில் கைது செய்தது. 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு பிரித்விராஜ் உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது.

வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் Non Trasable சான்றிதழ் பெறப்பட்டு, அதன் மூலம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பத்திரப்பதிவு செய்துள்ளார். நில உரிமையாளர் பிரகாஷ் புகாரில், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் கரூர் சார்-பதிவாளர் விசாரித்தபோது சான்றிதழ் ஏதும் தரவில்லை என தகவல் கூறப்படுகிறது.

The post ரூ.100 கோடி நில அபகரிப்பு தொடர்பான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் கைது appeared first on Dinakaran.

Tags : R. Police ,Inspector ,Prithviraj ,Vijayabaskar ,Karur ,MLA ,minister ,Karur district ,Doranakalpatty ,Kunnampatty ,R. ,Dinakaran ,
× RELATED கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது