×

காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரணை ஆர்டர்லி முறையை ஒழிக்க உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி சுஜாதா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறை வார்டன்கள் மற்றும் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து சிபிசிஐடி மற்றும் உளவுத்துறை உதவியுடன் விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், உள்துறை செயலாளரின் அறிக்கையை தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் வாதிடும்போது, காவலர்களை வீட்டு வேலைக்கோ அல்லது தனிப்பட்ட வேலைக்கோ பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க வேண்டுமென்று டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று சிறைத்துறை டிஜிபி தெரிவித்துள்ளார் என்றார். இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரணை ஆர்டர்லி முறையை ஒழிக்க உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Madras High Court ,CHENNAI ,Sujatha ,Puzhal Central Jail ,Tamilnadu ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு...