×

ரூ.457 கோடியில் கட்டப்படவுள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ரூ.457 கோடியில் கட்டப்படவுள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கு, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரூ.457 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், கோவை மாவட்டம் பிளிச்சியில் ரூ.211 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கோவை மத்திய சிறைச்சாலை கட்டடத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதேவேளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

The post ரூ.457 கோடியில் கட்டப்படவுள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Secretariat ,Chennai Thousand Lights ,Coimbatore district ,Pollachi ,Dinakaran ,
× RELATED பழைய ஓய்வூதிய விவகாரம் தொடர்பாக...