×

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

சென்னை: ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. வீட்டு வசதி வாரிய வீட்டுமனை முறைகேடு தொடர்பாக ஜாபர் சேட், மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2020ல் அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்தது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கின் அடிப்படையில், வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது, ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதன் அடிப்படையில் ED பதிவு செய்த வழக்கை விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஜாபர் சேட் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வு உத்தரவிட்டது.

The post ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Enforcement Department ,Zafar Said ,Chennai ,Enforcement Directorate ,Zafar Chet ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில்...