×

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவானது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் ஹுகே நகரில் 120 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த விவரமும் வௌியாகவில்லை.

The post பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Philippines ,Manila ,Dinakaran ,
× RELATED தென்கிழக்கு ஆசியா ஜஸ் ஸ்கேட்டிங் போட்டி