×
Saravana Stores

5 ஆண்டுகளாக மக்களிடம் கொள்ளையடித்த காங்கிரஸ் தலைவர்கள் விடைபெறும் நேரம் வந்துவிட்டது: சத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

சத்தீஸ்கர்: காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முங்கேலியில் நடந்த விஜய் சங்கலாப் மகராலியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தோல்வி என்பது உறுதியாகிவிட்டது. 5 ஆண்டுகளாக மக்களிடம் கொள்ளையடித்த காங்கிரஸ் தலைவர்கள் விடைபெறும் நேரம் வந்துவிட்டது. சத்தீஸ்கர் இளைஞர்களின் கனவுகள் நனவாகும்; மஹ்தாரி சகோதரிகள் வாழ்க்கை எளிதாகும் என்றார்.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவிக்கு ஒப்பந்தம் இருந்தது. ஆனால், முதல் இரண்டரை ஆண்டுகளில், முதலமைச்சர் இவ்வளவு கொள்ளையடித்து, ஏராளமான ஊழல்களைச் செய்து, கொள்ளையடித்த பணத்தைக் குவித்துவிட்டார் என மோடி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கணிதம் கற்பிப்பதில் விருப்பமுள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் எனக்கு சில கேள்விகள் உள்ளன. கட்சியைப் பற்றி சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். ‘மகாதேவ் பந்தய செயலி ஊழல்’ ரூ. 508 கோடி மற்றும் விசாரணை அமைப்புகள் ஏராளமான பணத்தை மீட்டுள்ளன.

இந்த வழக்கில் சத்தீஸ்கர் முதல்வரின் நெருங்கிய உதவியாளரும் சிறையில் உள்ளார். இதில் முதல்வர் எவ்வளவு பணம் பெற்றார் என்பதை காங்கிரஸ் வெளியிட வேண்டும். மற்ற கட்சி தலைவர்கள் எவ்வளவு பணம் பெற்றுள்ளனர், டெல்லிக்கு எவ்வளவு பணம் வந்துள்ளது என்பதை காங்கிரஸ் வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார். காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது என்றும் பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.

The post 5 ஆண்டுகளாக மக்களிடம் கொள்ளையடித்த காங்கிரஸ் தலைவர்கள் விடைபெறும் நேரம் வந்துவிட்டது: சத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Congress ,Narendra Modi ,Chhattisgarh Chhattisgarh ,Vijay ,Mungeli ,Chhattisgarh ,
× RELATED ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு