×

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள்: மாரியப்பன் தங்கவேலு வெள்ளி.! முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம், மாரியப்பன் தங்கவேலு வெள்ளி, ராம்சிங் வெண்கலமும் வென்றனர். மகளிருக்கான படகு போட்டியில் பிரச்சி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டு போட்டிகள் அண்மையில் முடிந்ததை அடுத்து, மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியான பாரா ஆசியா விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தமாக 302 பேர் பங்கேற்றுள்ளனர். நேற்று தொடங்கிய இந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார். சைலேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார். ராம் சிங் வெண்கலம் வென்றுள்ளார். அதே போல F51 கிளாப் எரிதலில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களையும் வென்றுள்ளனர். பிரணவ் குமார் தங்கம் வென்றார். தராம்பிர் வெள்ளி பதக்கம் வென்றார், அமித் குமார் வெண்கலம் வென்றார். அடுத்து, குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை மோனு கங்காஸ் வெண்கலம் வென்றார். படகு போட்டியில் பிராய்ச்சி யாதவ் வீராங்கனை வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள்: மாரியப்பன் தங்கவேலு வெள்ளி.! முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : India ,Para Asian Games ,Mariyappan Tangavelu ,Principal ,M.U. K. ,Stalin ,Chennai ,SAILESH KUMAR GOLD ,ADAVAR ,M.U. K. Stalin ,Dinakaran ,
× RELATED இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின்...