×

பாளை மைதான மேற்கூரை இடிந்த விவகாரம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

நெல்லை: பாளை மைதான மேற்கூரை இடிந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். நெல்லை மாவட்டம், ராதாபுரத்தில் நடந்த விழாவில் ரூ.608.96 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு முழுவதும் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்புகள் வழங்க ரூ.30 ஆயிரம் கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டு ரூ.14 ஆயிரம் கோடிக்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள தொகைக்கு அனுமதிக்காக காத்திருக்கிறோம். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் துரிதமாக பணிகள் நடந்து வருவதன் காரணமாக இந்தியாவில் 26வது இடத்தில் இருந்த தமிழ்நாடு முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நகர்ப்புற பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும். கிராமப்புறங்களில் இருந்து ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

The post பாளை மைதான மேற்கூரை இடிந்த விவகாரம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Palai Maidan ,Minister ,KN Nehru ,Nellai ,
× RELATED வடகிழக்கு பருவமழை.. போருக்கு தயாராவது...