×

ஒசூர், சிப்காட் காவல்நிலைய எல்லை பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பில் 171 சிசிடிவி கேமராக்கள் அமைப்பு: மாவட்ட எஸ்பி தொடக்கி வைத்தார்

ஒசூர்: ஒசூர், சிப்காட் காவல்நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்க 20 லட்சம் ரூபாய் மதிப்பில் 171 அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை மாவட்ட எஸ்பி தொடக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில் உள்ள காவல்நிலையங்களிலேயே அதிகஅளவிலான மொழிற்சாலைகள் மற்றும் வடமாநிலத்தவர்கள் உட்பட கர்நாடகா மாநில எல்லை பகுதியை கொண்ட காவல்நிலையமாக சிப்காட் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது.

சிப்காட் காவல்நிலைய எல்லையில் ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 85 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு இதன் மூலம் கண்காணிப்பு பணியில் போலிசார் ஈடுபட்டு, குற்றவாளிகளை பிடிக்க உதவியாக இருந்தநிலையில், மேலும் தொழிற்சாலைகளின் உதவியுடன் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக 171 சிசிடிவி கேமராக்கள் ஜூஜூவாடி முதல் அண்ணாமலை நகர் வரை பொருத்தப்பட்டுள்ளது.

இந்த சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி சிப்காட் காவல்நிலையத்தில் நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்கள் கேமராக்களை பயன்பாட்டிற்காக கொண்டு வந்ததுடன், சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிடும் அறையையும் திறந்து வைத்தார். இதன்மூலம் குற்றசம்பவங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் உதவியாக இருக்கும் என போலிசார் தெரிவித்தனர்.

The post ஒசூர், சிப்காட் காவல்நிலைய எல்லை பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பில் 171 சிசிடிவி கேமராக்கள் அமைப்பு: மாவட்ட எஸ்பி தொடக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Hosur, Chipgat police station ,District SP ,Hosur ,Chipgat police station ,Hosur Corporation ,Krishnagiri ,District ,
× RELATED அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்க கோரி...