×

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி இருப்பார்கள்; சொல்கிறார் கடம்பூர் ராஜூ

செய்துங்கநல்லூர்: தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டியில், ‘மக்கள் மனநிலைக்கு ஏற்ப அதிமுக கூட்டணி அமையும். அனைவரும் ஒன்று சேர்ந்த கூட்டணியாக இருக்கும். தேர்தலுக்கு இன்னும் அவகாசம் உள்ளது. முதல் கூட்டணியாக பாஜ கூட்டணி அமைந்துள்ளது. இது மெகா கூட்டணியாக இருக்கும். தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகனை விமர்சிப்பது ஒட்டுமொத்த தமிழர்களை விமர்சிப்பதாகும்’ என்றார்.

ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு அதிமுக எதிர்ப்பு, பாமகவின் இருவேறு மனநிலை, மாநிலங்களவை வேட்பாளர் அறிவிப்பில் தேமுதிக அதிருப்தி என்ற நிலையில் மெகா கூட்டணி சாத்தியமா? என்ற கேள்விக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பவர்கள் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் நிச்சயம் இருப்பார்கள். பாஜ தலைமையும், எங்களது தலைமையும் நிச்சயமாக நல்ல கூட்டணியை அமைக்கும்’ என்று கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தெரிவித்தார்.

 

The post அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி இருப்பார்கள்; சொல்கிறார் கடம்பூர் ராஜூ appeared first on Dinakaran.

Tags : OPS ,TTV ,AIADMK alliance ,Kadambur Raju ,Sedunganallur ,Karungulam, Tuticorin district ,AIADMK ,minister ,North District ,MLA ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...