×

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பதா?: அன்புமணி அறிக்கை

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை இதுவரை அமல்படுத்தாமல் இருப்பது ஏன் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தில் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்ட நிலையில், அதன் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை விட மிகவும் மோசமான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் தான். அங்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது என்பதை அறிந்து தமிழகத்திலும் செயல்படுத்த முடியும்.
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பதா?: அன்புமணி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Chennai ,PMK ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...