×

ஒடிசாவில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது

புவனேஸ்வர்: ஒடிசாவில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷியை சிபிஐ கையும் களவுமாக பிடித்தது. புவனேஸ்வரில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்ட வழக்கை முடித்துவைக்க தொழிலதிபரிடம் பேரம் பேசியுள்ளார். ரூ.5 கோடி பேரம் பேசிய நிலையில் ரூ.2 கோடி தருவதாக தொழிலதிபர் ஒத்துக் கொண்டார்

The post ஒடிசாவில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது appeared first on Dinakaran.

Tags : Odisha Bhubaneswar ,Odisha ,Deputy Director of Enforcement ,Shintan Ragwanshi ,CPI ,Bhubaneswar ,Dinakaran ,
× RELATED ஊரக வேலைத் திட்டத்தில் காந்தியின்...