×

ஆக்கிரமிப்பு அகற்றுவது பற்றி கோர்ட் ஆணையை பின்பற்றாதது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: ஆக்கிரமிப்பு அகற்றுவது பற்றி ஊராட்சி தலைவர், பி.டி.ஒ. நோட்டீஸ் அனுப்பக் கூடாது என்ற கோர்ட் ஆணையை பின்பற்றாதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்ப அதிகாரம் இல்லை என்ற உத்தரவுகள் இருந்தபோதும் தொடர்ந்து இதுபோன்று செய்யப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி சேர்ந்த கண்ணுச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு ஆக.21-க்கு ஒத்திவைத்தது.

The post ஆக்கிரமிப்பு அகற்றுவது பற்றி கோர்ட் ஆணையை பின்பற்றாதது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,P. ,D. ,O. ,Court ,Dasildar Court ,Dinakaran ,
× RELATED கல்லீரல் அறுவை சிகிச்சை கட்டமைப்பு: ஐகோர்ட் கிளை கேள்வி