×
Saravana Stores

ஸ்வீட்கார்னின் சத்துகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஸ்வீட்கார்ன் சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியமானதும் கூட. இதில் நமது உடலுக்குத் தேவையான ஊட்டசத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன. ஸ்வீட் கார்னில் நார்சத்து (fibre), பொட்டாசியம், விட்டமின் பி12, போலிக் ஆசிட், மாங்கனீஸ், துத்தநாகம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் (விட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, பி7, பி9, பி12 ஆகியவற்றை விட்டமின் பி காம்ப்ளக்ஸ் என்பர்) ஆகியன உள்ளன. மேலும் சோடியம், கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் போன்றவை குறைவாக உள்ளன.

கண்பார்வை மேம்படும்: ஸ்வீட் கார்னில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது மட்டுமின்றி லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், கண் நோய்களை தடுப்பதற்கு உதவுகின்றன. வயது முதிர்ச்சியால் ஏற்படும் கண் பார்வை குறைபாட்டை குறைப்பதற்கும் உதவுகின்றன. மேலும் கண்களில் உள்ள கரோட்டினாய்டுகள் சிதைவையும் குறைக்கின்றன.

செரிமானத்தை சீராக்கும்: ஸ்வீட் கார்னில் உள்ள நார்சத்து, உடலின் செரிமானத்திற்கு உதவிபுரிந்து, மலச்சிக்கலைத் தடுத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது மட்டுமின்றி வயிற்றுப்போக்கு பிரச்னையையும் சரி செய்கிறது.நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்: ஸ்வீட் கார்னில் உள்ள விட்டமின் பி மற்றும் கார்போஹைட்ரேட், இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தி நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

செல் வளர்ச்சியை மேம்படுத்தும்: ஸ்வீட் கார்னில் உள்ள விட்டமின்கள், மெக்னீசியம், செலினியம், துத்தநாகம் போன்றவை உடற்செல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.
ஞாபக சக்தியை அதிகரிக்கும்: ஸ்வீட் கார்னில் உள்ள வைட்டமின் பி1 ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

உடல் எடையைக் குறைக்க உதவும்: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஸ்வீட் கார்னை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது உடல் எடை
குறைப்பதற்கும் உதவுகிறது.

இதயத்தைப் பாதுகாக்கும்: ஸ்வீட் கார்னில் உள்ள பி9 இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை பாதுகாத்து, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.

முதுமையை தடுக்கும்: உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முதுமையை தடுக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து, சிறுநீரகம் தொடர்பான நோய்களில் இருந்தும் உடலை பாதுகாக்கிறது. மேலும் மார்பக புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.

தொகுப்பு: ரிஷி

The post ஸ்வீட்கார்னின் சத்துகள்! appeared first on Dinakaran.

Tags : Sweetcorn ,Dinakaran ,
× RELATED சரும வறட்சியைப் போக்கும் மஞ்சள்கிழங்கு!