- மேக்னஸ் கார்ல்சன்
- எரிக்சன்
- நோர்வே செஸ் சாம்பியன்
- ஸ்டாவங்கர்
- கிராண்ட் மாஸ்டர்
- அர்ஜுன் எரிக்சன்
- நோர்வே செஸ் சாம்பியன்
- ஸ்டாவஞ்சர், நார்வே
- தின மலர்
ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசியை, உலக நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் எளிதில் வீழ்த்தினார். நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன், நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசியுடன் மோதினார்.
போட்டியின் இறுதிக் கட்டத்தில் எண்ட் கேம் ஆட்டத்தில் கார்ல்சனின் சாதுரியமான நகர்த்தல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல், எரிகேசி தோல்வியை தழுவினார். அந்த போட்டியை எப்படி டிரா செய்திருக்க முடியும் என்பதை, போட்டிக்கு பின், கார்ல்சன் வெப்கேஸ்ட் நேரடி ஒளிபரப்பில் விளக்கிக் கூறினார்.
இந்த போட்டிக்கு பின், இன்னும் 6 ரவுண்டு போட்டிகள் மீதம் உள்ள நிலையில், மேக்னஸ் கார்ல்சன், 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனா 7 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். இந்தியாவை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசி 4.5 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளனர்.
The post நார்வே செஸ் சாம்பியன்ஷிப் எரிகேசிக்கு பாடமெடுத்த மேக்னஸ் கார்ல்சன்: எண்ட்கேமில் அதிரடி வெற்றி appeared first on Dinakaran.
