×

வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக வரும் செய்தி வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி பதிவு

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக வரும் செய்திகள் மிகவும் வருத்தமளிக்கின்றன என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்களுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

The post வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக வரும் செய்தி வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி பதிவு appeared first on Dinakaran.

Tags : northeastern states ,Rahul Gandhi ,Delhi ,Assam ,Arunachal Pradesh ,Lok Sabha ,Central ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...