- ரெட் ரன் போட்டி
- மலம்புழா
- பாலக்காடு
- இளைஞர்களின் சிறந்த நாள்
- பாலக்காடு மாவட்ட மருத்துவ அலுவலகம்
- மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்
- மாவட்ட நாட்டு நலப்பணித் திட்டம்
- தின மலர்
பாலக்காடு, ஆக.1: பாலக்காடு மாவட்ட அளவிலான யூத் பெஸ்ட் தினத்தை முன்னிட்டு பாலக்காடு மாவட்ட மருத்துவ அலுவலகம், மாவட்ட எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி, மாவட்ட நாட்டு நலத்திட்டம் ஆகியவை ஒருங்கிணைப்பில் மலம்புழாவில் ரெட் ரன் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த போட்டியை மலம்புழா கிராமப்பஞ்சாயத்து தலைவர் ராதிகா மாதவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில், வெற்றியடைந்த மாணவர்களுக்கு வாளையார் பாரஸ்ட் ரேஞ்சு அதிகாரி பிரவீண் சான்றிதழ்கள், மெடல்கள் ஆகியவை வழங்கினார். மாவட்ட எய்ட்ஸ் கன்ட்ரோல் அதிகாரி டாக்டர் ரியாஸ், கேரள எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி திட்ட மேலாளர் சுனில்குமார், மாநில ஸ்போர்ட்ஸ் கவுன்சில் உறுப்பினர் ராமசந்திரன் ஆகியோர் உட்பட உயரதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். மகளிருக்கான போட்டியில் பாலக்காடு மேழ்ஸி கல்லூரி மாணவியர்களும், அரசு விக்டோரியா கல்லூரி மாணவ மாணவியர்களும் பரிசுகள் பெற்று மகிழ்ச்சியடைந்தனர்.
The post மலம்புழா அருகே ரெட் ரன் போட்டி appeared first on Dinakaran.
