×

ஊட்டியில் பனிக்கால கவியரங்கம்

ஊட்டி, டிச.15: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாவேந்தர் இலக்கிய பேரவை சார்பில் ஊட்டி ஒய்எம்சிஏ சிறார் பூங்காவில் பனிக்கால கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர் சுகுணன் தலைமை வகித்தார். கவிஞர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார்.

இக்கவியரங்கில் பனிக்காலத்தை வரவேற்கும் விதமாக என்னுள் நிறைந்தவள், பனிமலர், பகலில் மின்னல், புல்வெளியில் முத்துக்கள், அறையில் வெளிச்சம், திரையிட்ட சன்னல், எழில் பூத்த வானம், நவீன முல்லை, சிறையில் கங்கை என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் வாசிக்கப்பட்டது. இதில் கவிஞர்கள் வாசமல்லி, துரை அமுதன், பிரபு, சுந்தர பாண்டியன் கவிதைகள் வாசித்தனர். கவிஞர் முனிசுவரி நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

 

Tags : Winter Poetry Festival ,Ooty ,Ooty YMCA Children's Park ,Bhavendar Literary Association ,Nilgiris ,Poet Sugunan ,Poet Janardhanan ,
× RELATED கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள்