பனியன் தொழிலாளர்களுக்கு சம்பள பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும்

திருப்பூர், நவ.25: திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு புதிய சம்பள பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும் என அனைத்து பனியன் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து பனியன் தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் பி.என்.ரோட்டிலுள்ள ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி. பனியன் சங்க பொருளாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. பனியன் சங்க பொதுச்செயலாளர் சம்பத், சி.ஐ.டி.யு. பனியன் சங்க பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, தொ.மு.ச. பனியன் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன்,  பொருளாளர் பூபதி, ஐ.என்.டி.யு.சி. சங்க செயலாளர் சிவசாமி, தலைவர் பெருமாள், எம்.எல்.எப் மாவட்ட செயலாளர் சம்பத், பனியன் சங்க செயலாளர் மனோகர், ஹெச். எம்.எஸ் பனியன் சங்க செயலாளர் முத்துசாமி, துணை செயலாளர் கெளதம் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பனியன் தொழிலாளர்களுக்கு புதிய சம்பள பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெற வேண்டும். உடனடியாக இ.எஸ்.ஐ மருத்துவ பணிகளை தொடங்க வேண்டும். வரும் 26ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

More