மது விற்ற 9 பேர் கைது

ஈரோடு, நவ.23: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஈரோடு எஸ்பி.க்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து, எஸ்பி. தங்கதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.

இதில் சட்ட விரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக 9 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், அரசு அனுமதியின்றி ஓட்டல் கடைகளிலும், தள்ளுவண்டி கடைகளிலும் மது அருந்த அனுமதித்தற்காக கடை உரிமையாளர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories:

>