×

மஞ்சநாயக்கன்பட்டி சாலை மோசம் பொதுமக்கள் அவதி

நத்தம், நவ. 21: நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்குட்பட்டது மஞ்சநாயக்கன்பட்டி. இவ்வருக்கு செல்லும் சாலையில்தான் பஞ்சையம்பட்டி, ஒத்தினிபட்டி, குட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இதனால் இச்சாலையில் டூவீலர், கார் போன்ற வாகனங்கள் போக்குவரத்து அதிகமிருக்கும். ஏற்கனவே இச்சாலை குண்டும், குழியுமாக மிகவும் சேதமடைந்து இருந்த நிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் இன்னும் மோசமாகி கிடக்கிறது. மேலும் குறுகலான இச்சாலையால் கார் போன்ற வாகனங்கள் வந்தால் டூவீலர்கள் ஒதுங்க முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன. இங்கு விளையும் பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சாலையை புதுப்பித்து தர உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Manjanayakkanpatti ,road ,suffering ,
× RELATED பழநி கிரிவலப் பாதையில் சுற்றுச்சுவர்...