சேலம் - வாணியம்பாடி இடையே 6 வழிச்சாலை அமைக்க பட்டா நிலங்களை கையகப்படுத்த முடிவு

தர்மபுரி,  நவ.21:  சேலம்- வாணியம்பாடி இடையே 6வழிச்சாலை அமைக்க அரூர் அண்ணா நகரில்  அரசு வழங்கி இலவச பட்டாவில் வீடு கட்டி வாழும் மக்களை வெளியேற்றி, நிலத்தை  கையகப்படுத்த முயற்சிப்பதாக கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு வழங்கினர்.ர்  அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நேற்று மாலை தர்மபுரி மாவட்ட  கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் கார்த்திகாவிடம் வழங்கிய புகார்  மனு விபரம்: அரூர் அண்ணா நகர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட  கூலித்தொழில் செய்துவரும் குடும்பத்தினர் வசிக்கின்றனர். அண்ணா நகர் வழியாக  சேலம் - வாணியம்பாடி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. போக்குவரத்து நெரிசலை  தவிர்க்க, இந்த சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக  நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வகுறிது. இந்நிலையில் அண்ணா நகர்  பகுதியில், அரசு வழங்கிய இலவச பட்டா நிலத்தில் வீடுகட்டி வசிக்கும் எங்களை  காலி செய்யும்படி அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த 2007ம் ஆண்டில் தான்  பட்டா வழங்கினர். இந்நிலையில், அரசு வழங்கிய பட்டா போலி பட்டா என கூறி,  இடத்தை காலி செய்ய அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். நாங்கள் இந்த இடத்தில் 50  ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கிறோம். இந்த இடத்தை விட்டு நாங்கள் வெளியேற  மாட்டோம். மீறி எங்களை வெளியேற்ற நினைத்தால், ரேஷன் கார்டு, வாக்காளர்  அடையாள அட்டை, ஆதார் அட்டைகளை அரசிடம் திருப்பி ஒப்படைத்து விட்டு, மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில குடியேறும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த  மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>