×

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா விதிகளை மீறியதாக ரூ.18.77 லட்சம் அபராதம் வசூல்

ஈரோடு, நவ.20: ஈரோட்டில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக இதுவரை ரூ.18.77லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகரித்தது. தினமும் நூறுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டது.  இதில், சமூக இடைவெளி, முக கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு, இதை மீறுவோர்களிடம் அபராதம் வசூலிக்க அரசு உத்தரவிட்டிருந்தது. இதில், முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200, சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500, பொது இடத்தில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.500, நிறுவனங்களில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்காவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் என வசூலிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.அதன்பேரில், ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, சுகாதாரத்துறையினர், வருவாய் துறையினர், போலீசார் ஆகியோர் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு நடத்தி கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்.  இதில், மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.18 லட்சத்து 77ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : district ,Erode ,
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...