×

வேளாண் அதிகாரி தகவல் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

அரியலூர், நவ. 10: அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம், பொதுமக்களுக்கு சாலை விதிகள் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை எஸ்பி சீனிவாசன் துவக்கி வைத்தார். முன்னதாக ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அண்ணா சிலையில் துவங்கி பேருந்து நிலையம், எம்ஜிஆர் சிலை, மாதா கோயில் வழியாக சென்று மீண்டும் அண்ணா சிலையில் பேரணி நிறைவடைந்தது. பேரணியில் அரியலூர் உட்கோட்ட டிஎஸ்பி மதன், காவல் ஆய்வாளர் செந்தில்மாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் மற்றும் போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர். இதேபோல் செந்துறையிலும் ஹெல்மெட் அணிதல் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...