×

வெளியூர்களிலிருந்து பெரம்பலூருக்கு தீபாவளிக்கு வருவோர் கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

பெரம்பலூர்,நவ.9: பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து பண்டிகைக்காக பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருவோருக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் அரசு மருத் துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்திற்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பண்டிகைக்காக வருகிற பொது மக்களும்,

இங்கு வசிக்கும் பொதுமக்களும் காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி, தசைவலி, மூச்சு விடுவதில் சிரமம், சுவையின்மை, நுகர்ச்சியின்மை, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற வற்றில் ஏதாவது ஒரு அறிகுறி தென்பட்டாலோ உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தற்போது தீபாவளி பண்டிகை வரை பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் 10 இடங்களில், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உழவர் சந்தை, கடைவீதி, வெங்கடேசபுரம் (கிருஷ்ணா தியேட்டர் அருகில்) எளம்பலூர் ரோடு, பெரியார் சிலை, பள்ளிவாசல், அஞ்சலக அலுவலக சாலை,

மார்க்கெட் மற்றும் நான்கு ரோடு ஆகிய இடங்க ளில் மூன்று இடமான புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மற்றும் நான்கு ரோடு பகுதிகளில் தெர்மல் ஸ்கேனர் எனப்படும் உடல் வெப்பநிலை க ண்டறியும் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு, கபசுர குடிநீரும் வழங்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை வரை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மற்றும் நான்கு ரோடு ஆகி ய இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் தொ டங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அறிகுறிகளில் ஏதாவது ஒன்று காணப்பட்டாலும் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரிசோதனை மேற்கொண்ட நபருக்கு 24 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவு தெரிவிக்கப்படும். அதுவரை பரிசோதனை செய்து கொண்ட நபர் பொது இடங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். பரிசோதனை நெகட்டீவாக இருந்தாலும் மேற்கொண்ட அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவரிடம் ஆலோசனை பெற்று ரத்த பரிசோதனை, சி.டிஸ்கேன், எக்ஸ்-ரே போன்ற பரிசோதனை செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Perambalur ,Diwali ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி