×

ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 29 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

பெரம்பலூர்,நவ.9: பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாகவுள்ள 29காலிப் பணியிடங்களுக்கு புதியதாக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இன்றும்,நாளையும் விண் ணப்பங்கள் விநியோகிக் கப் படுகிறது என பெரம்பலூர் எஸ்பி நிஷா பார்த்திபன் ெதரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட ஊர்க் காவல் படைக்கு 25 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 29 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இத னையொட்டி இன்றும் (9ம்தேதி), நாளையும் (10ம்தேதி) என இரண்டு நாட்கள் காலை 10 மணி முதல் மா லை 4 மணிவரை பெரம்பலூர் பெரிய கடைவீதியிலு ள்ள மாவட்ட ஊர்க் காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன.

அதனைப் பெற்று ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ள வர்கள் விண்ணப்பிக்கலா ம். விண்ணப்பிக்க விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவோ அல்லது தேர்ச்சி பெறாதவர்களாகவோ இருக்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் சேரலாம். உடல் ஆரோக்கியமாகவும், இருக்க வேண்டும். தேர்விற்கு விண்ணப்பிக்கும் நாளன்று 20 வயது நிறைவடைந்தவராகவும், 45 வயது நிறைவடையாதவராகவும் இருக்கவேண்டும். கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் ஒன்றை தேர்வின் போது எடுத்து வர வேண்டும். மேலும் உடற்தகுதிகள் காவல் துறையைப் போன்றது. தற்போது எடுக் கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 எடுத்து வரவேண்டும்.

இந்தியக்குடியுரிமை பெற்றவராகவும், அரசியல் கட்சி தொடர்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும். இப்பணிக்கு மாத ஊதியம் எதுவும் இல்லை. பணி நாட்களுக்கு உரிய படித்தொகை மட்டும் பெற்றுத் தரப்படும். இப்பணிக்கு சேர விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஊர்க்காவல் படை பணிக் குத் தேர்ந்துஎடுக்கப்பட்டவர்கள் 3 ஆண்டுகள் கட்டாயம் தொடர்ந்து பணிக்கு வருகை தர வேண்டும். தேர்வு நாளன்று எவ்வித பயணப்படியும் வழங்கப்படமாட்டாது. 45 நாட்கள் கவாத்து பயிற்சி நடைபெறும். ஊர்க் காவல் படை பணிக்கு சேர்ந்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து சமூக சேவை புரிந்திட பெரம்பலூர் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்களை மாவட்ட காவல்துறை சார்பாக வரவேற்கிறோம் என அதில் எஸ்பி தெரிவித்துள்ளார்.

Tags : Kayts ,
× RELATED ஊர்காவல் படையினர் ஊதியத்தை அரசு...