அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாநகராட்சி ஓட்டுநர்கள் 40 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் சேரும் ஒரு பகுதி குப்பைகள் பெருங்குடி கிடங்கிற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக 9, 10, 13 மண்டலங்களில் இருந்து சென்று வரும் குப்பை லாரிகளை அவ்வப்போது காவலர்கள் தடுக்கின்றனர். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இசிஆர், மத்திய கைலாஷ், சர்தார் பட்டேல் சாலைகளில் வரக்கூடாது என்று கூறி ஓட்டுநர்களை மரியாதை குறைவாக நடத்தி லாரிகளை திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்ட மாநகராட்சி குப்பை லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் செல்வக்குமார் மீது அக்டோபர் 24ம் தேதி கோட்டூர்புரம் போக்குவரத்து காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிவேகமாக வாகனத்தை இயக்கியது, வெள்ளை கோட்டை தாண்டியது என ரூ500 அபராதம் விதித்துள்ளனர். இதனை கண்டித்து போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள அண்ணா சாலை டி.2 காவல் நிலையம் முன்பு சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>