×

மதுரை மாவட்டத்தில் நவ.9ல் ‘தமிழகம் மீட்போம்’ காணொலி பொதுக்கூட்டம் 350 இடங்களில் நடத்த ஏற்பாடு

வாடிப்பட்டி, நவ.5: தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் மீட்போம் என்ற பெயரில் 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது. இக்கூட்டம் மதுரை மாவட்டத்தில் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இதுதொடர்பாக மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் திருப்பாலையில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்தது. மாவட்ட நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், சோம சுந்தரபாண்டியன், சேகர், மாவட்ட கவுன்சிலர் நேருபாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் ஜி.பி.ராஜா, மதன்குமார், பகுதி செயலாளர்கள் பொம்மதேவன், சசிக்குமார், வக்கீல் கலாநிதி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் அண்ணாமலை, பாசபிரபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ, வருகிற 9ம் தேதி மாலை 4 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெறவுள்ள தமிழகம் மீட்போம் சிறப்பு பொதுக்கூட்டத்தை சுமார் 350 இடங்களில் நடத்த ஏற்பாடுகள் இளைஞரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் 300 பேர் பங்கேற்கும் வகையில் நடைபெறும். பொதுக்கூட்டத்தின் போது கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சிறைச்செல்வன், பொதும்பு தனசேகர், பசும்பொன்மாறன், மதுரை மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன், வாடிப்பட்டி பால்பாண்டியன், பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : meeting ,places ,Madurai district ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்குவதில் உள்ள...