×

போதிய மழை இல்லாததால் காய்கறி சாகுபடி செய்ய முடியவில்லை

 

க.பரமத்தி, ஜூன் 26: ஒன்றியத்தில் போதிய மழை இல்லாததால் காய்கறி சாகுபடி செய்ய முடியவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிப்பதுடன் விளைச்சல் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். க.பரமத்தி ஒன்றியம் அமராவதி ஆற்றங்கரையோர பகுதிகளான நஞ்சைகாளகுறிச்சி, புஞ்சைகாளகுறிச்சி, எலவனூர், ராஜபுரம், விசுவநாதபுரி, கோடந்தூர் ஊராட்சி பகுதிகளும் அஞ்சூர், கார்வழி, மொஞ்சனூர், எல்பிபி வாய்க்கால் கரையோர பகுதிகளில் காய்கறி விவசாயம் முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர்.

இப்பகுதியில் பெரும்பாலும் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் தக்காளி, வெண்டக்காய், சுரக்காய், வெங்காயம், உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து அறுவடையின் போது தங்களின் தேவை போக வார சந்தைகளில் வியாபாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஆண்டு தோறும் விலைச்சல் காலங்களில் விற்று வந்துள்ளனர்.

தற்போது போதிய மழை இல்லாததால் இந்த ஆண்டு தோட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சிறிது சிறிதாக சரிந்துவிட்டது. இதனால் கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் காய்கறிகளை விதைக்க முடியாத நிலையில் விவசாயிகள் கவலையில் தவிக்கின்றனர். ஒரு சிலர் குறைந்த கிணற்று பாசனம் மூலம் விவசாயம் குறைந்த பரப்பிலேயே காய்கறி விவசாயம் செய்து தங்களது தேவையை மட்டும் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இதனால் வாரசந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, நாளுக்கு நாள் காய்கறி விலைகள் அதிகரித்து வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், போதிய மழை இல்லாததால் ஒன்றிய சுற்று வட்டார பகுதியில் போதிய அளவில் காய்கறி பயிரிடப்படவில்லை. வரத்து குறைவால் காய்கறி விலை அதிகரித்து வருகிறது. கனமழை பெய்தால் மட்டுமே நிலமை சீராக வாய்ப்புண்டு என்றனர்.

The post போதிய மழை இல்லாததால் காய்கறி சாகுபடி செய்ய முடியவில்லை appeared first on Dinakaran.

Tags : K. ,Paramathi ,Union ,Amravati ,Nanjaikalakurichi ,Punjaikalakurichi ,Elavanur ,Rajapuram ,Viswanathapuri ,Kodandur ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஒன்றியக்குழு கூட்டம்