×

பா.ஜ.வினர் ஆர்ப்பாட்டம்

கோவை, அக்.28: இந்து பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தினர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே பா.ஜ.வின் மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயதிலகா தலைமையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவரது உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ. மாநில துணை தலைவர்கள் அண்ணாமலை, பேராசிரியர் கனகசபாபதி, மாநில பொருளாளர் சேகர், மாவட்ட தலைவர் நந்தக்குமார், மாநில ஊடக பிரிவு செயலர் சபரி கிரிஷ்,  இளைஞரனி மாநில செயலாளர் ப்ரீத்தி லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : BJP ,protest ,
× RELATED போகலூர் அலுவலகத்தில் அனுமதியின்றி...