×

இந்த நாள் கத்தியை காட்டி பணம் செல்போன் வழிப்பறி

சிவகாசி, அக்.22: சிவகாசி அருகே கத்தியை காட்டி பணம், செல்போன் பறித்த சம்பவங்களில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி அருகே ஈஞ்சார் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(29). இவர் திருத்தங்கல் விருதுநகர் ரோட்டில் சென்ற போது, திருத்தங்கல் பராசக்தி காலனியை சேர்ந்த சுரேஷ்குமார்(24), பிரபு(22), பெருமாள்(42) ஆகியோர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்தனர். திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் சிவகாசி அருகே லிங்கபுரம்காலனியை சேர்ந்தவர் ரெங்கராஜன்(24). இவர் பள்ளபட்டி ரோட்டில் நடந்து சென்றபோது முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த கார்த்தீஸ்வரன் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து தப்பினார். சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சி மாவட்ட கோர்ட்டுகளில் மக்கள்...