×

பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி

அரியலூர், அக்.22: அரியலூர் காவல்துறையில் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் காவலர் வீரவணக்கநாள் அனுசரிக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரத்னா, மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுமதி, காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், உயிர்நீத்த காவலர் குடும்பத்தினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பணியின்போது வீர மரணம் அடைந்த 264 காவலர்களுக்கு மூன்று சுற்றுகளாக 66 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : guards ,
× RELATED பழங்குடியினருக்கு மரியாதை!: ட்வீட் கார்னர்...