கரூர், அக். 22: கரூர் தெரசா கார்னர் அருகே மழைநீர் செல்லும் வாய்க்காலில் முட்புதர்கள் படர்ந்துள்ளன. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வடிகால் வசதிக்காக மழைநீர் செல்லும் வகையில் வாய்க்கால்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதுபோல, கரூர் தெரசா கார்னர் பகுதியிலும் வாய்க்கால் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.மழைக்காலங்களில் இந்த வாய்க்காலின் வழியாக மழைநீர் சென்று வருகிறது. இந்நிலையில், இந்த வாய்க்கால் சீரமைக்காத காரணத்தினால் பல ஆண்டுகளாக முட்புதர்கள் வளாந்த நிலையில் உள்ளன. எனவே, பருவமழை துவங்குவதற்கு முன்பு சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு இந்த வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்திட தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.