×

ஓடாமல் நின்ற வேனுக்கு தஞ்சாவூரில் இருந்து வந்தது ‘பைன்’ சோழவந்தானில் உரிமையாளர் அதிர்ச்சி

சோழவந்தான், அக். 21: சோழவந்தான் ஸ்டாண்டில் ஓடாமல் நின்ற வேனுக்கு தஞ்சாவூர் போலீசார் ரூ.200 அபராதம் விதித்திருப்பதை கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். சோழவந்தானை சேர்ந்தவர் செந்தில். இவர் சொந்தமாக வேன் வைத்து சுற்றுலா டிரீப் அடித்து வருகிறார். இவரது வேன் கடந்த 10 நாட்களாக எங்கும் செல்லாமல் சோழவந்தான் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தஞ்சாவூர் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து ரூ.200 அபராதம் கட்ட சொல்லி செந்தில் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் ஓடாமல் நிற்கும் வாகனத்திற்கு போலீசார் அபராதம் விதித்ததை எண்ணி வேதனையில் உள்ளார்.

இதுகுறித்து செந்தில் கூறுகையில், ‘இதுபோல் பலருக்கும் ஓடாமல் நிற்கும் போது அபராதம் கட்ட சொல்லி எஸ்எம்எஸ் வருகிறது. இதை தற்போது கட்டாமல் விட்டாலும் சாலை வரி கட்டும் போது உரியவர்களுக்கு தெரியாமல் எடுத்து விடுகின்றனர். போலீசார் தவறாக வாகன எண்ணை பதிவு பண்ணுவதால் வரும் தவறா அல்லது தினம் இத்தனை வாகனங்கள் அபராதம் விதிக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் விதிமீறலா என உயரதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். ஏற்கனவே கொரோனா காலத்தில் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்து வாழும் எங்களை இதுபோல் அபராதம் விதிக்காமல் காக்க வேண்டும்’ என்றார்.

Tags : owner ,Pine' Cholavanthan ,Thanjavur ,
× RELATED வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக...