×

பொதுமக்களுக்கு இடையூறாக கல்வெட்டு அமைக்கும் பணி: கலெக்டரிடம் புகார்

திருவள்ளூர்: பொதுமக்களுக்கு இடையூறாக, சாலையில் கல்வெட்டு அமைக்கும் பணி நடப்பதாக, கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். திருவள்ளூர் ஒன்றியம் தண்டலம் கிராம பொதுமக்கள், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம், ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு: தண்டலம் கிராமம் அருகே செவ்வாய்பேட்டையில் இருந்து கீழனூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஏற்கனவே இருந்த மழைநீர் கால்வாயை அகற்றிவிட்டு சாலையின் நடுவே மழைநீர் செல்வதற்காக கல்வெட்டு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறாகவும் மிகவும் மோசமான நிலையில் காலதாமதமாகவும் பணி  நடந்து வருகிறது. எனவே, இந்த பணியினை, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கல்வெட்டு அமைக்க வேண்டும். பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : public ,Collector ,
× RELATED ஒரத்தநாட்டில் பொதுமக்கள் புகார் மனு மீதான குறைதீர் முகாம்