×

குறைதீர் முகாமிற்கு வர வசதியாக ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு அரசு பஸ் இயக்க வேண்டும் கிராமமக்கள் வலியுறுத்தல்


சின்னாளபட்டி, செப்.30: ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு அரசு பேருந்து வசதி இல்லாததால் மனுநீதி நாளுக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். செம்பட்டியில் இருந்து ஆட்டோவில் தொங்கிக்கொண்டு வரும் அவலநிலையில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2 வாரமாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. பேருந்து வசதி இல்லாததாலும், அரசு பேருந்துகளை இயக்காததாலும் மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு வரும் பொதுமக்கள் ரூ.50 முதல் 100 வரை செலவு செய்து வரவேண்டிய நிலையில் உள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் இன்றுவரை ஆத்தூருக்கு அரசு பேருந்து இயக்கவில்லை.

பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளான திங்கள்கிழமை அன்று அரசு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆத்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் சையது அபுதாகிர் கூறுகையில், மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு திங்கள்கிழமை அன்று ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் திங்கள்கிழமை செம்பட்டியில் இருந்து அரசு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.

Tags : government ,taluka office ,Attur ,camp ,Kuradir ,
× RELATED நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர்...