×

தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் செல்வராஜ் எம்.பி. பேட்டி

அந்தியூர், செப். 29: வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் அந்தியூரில் எம்.பி. செல்வராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் முன்னிலையில் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட தி.மு.க. கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   தி.மு.க. துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறும் வரை தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழகத்தில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பா.ஜ.வினர் பெரியார் சிலையை அவமரியாதை செய்து வருகிறது. இச்சம்பவத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சிக்கு வரும். அந்தியூர் பகுதிகளில் உள்ள ஏரிகளை சீரமைத்து மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை ஏரிகளில் நிரப்பி அந்தியூரை விவசாயத்திற்கு ஏற்ற பசுமை சோலையாக்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தி.மு.க. உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அந்தியூர் செல்வராஜ் எம்.பி. தெரிவித்தார்.

Tags : DMK ,Selvaraj ,Tamil Nadu ,
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா