×

மாவட்டம் முழுவதும் திமுக, கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, செப்.29:மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்தும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், தர்மபுரி மாவட்டம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக நகர செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். முன்னாள் நகர செயலாளர்  சிட்டி முருகேசன், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ டெல்லிபாபு, ஜோதிபாசு,  காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், திக மாவட்ட தலைவர் சிவாஜி, விசி  ஜெகநாதன், ராமதுரை, மமக அஷ்கர்,  முல்லைவேந்தன், ரவி, கோமலவள்ளி, காசிநாதன், ராஜா, வக்கீல் செல்வராஜ்  மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
இண்டூர் பஸ் ஸ்டாண்ட் அருகே  நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் எச்சனஅள்ளி சண்முகம் தலைமை வகித்தார். இதில், விசி சந்தானமூர்த்தி, காங்கிரஸ் மாதேஸ்,  அப்புனு, சிபிஐ மாதேஸ், திமுக கண்ணன், சித்தன், சின்னராஜ், கிருஷ்ணன்,  ராஜகோபால், சக்திவேல், சாம்ராஜ், பாண்டுரங்கன், குமரன், முனுசாமி,  மூர்த்தி, தேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாலக்கோடு: பாலக்கோடு தெற்கு ஒன்றிய திமுக  செயலாளர் கே.எஸ்.குட்டி தலைமையில், 600க்கும் மேற்பட்டோர்  ஹவுசிங் போர்டு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி எம்பி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ரவி, கந்தசாமி, கருணாநிதி, ஒன்றிய அவைத்தலைவர் பூமணி, ஒன்றிய துணை செயலாளர் முனியப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜாமணி அழகு சிங்கம் கலந்து கொண்டனர். அதேபோல், பாலக்கோடு பேரூர் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். அமானி மல்லாபுரம் பாரத ஸ்டேட் வங்கி முன்புறம், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.கே.அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரிமங்கலம்:பெரியாம்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காரிமங்கலம் கிழக்கு  ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் மாதையன், மாரியப்பன், ஜெயலட்சுமி சங்கர், மகேஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காரிமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், வெள்ளிசந்தையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். காரிமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில், பிசிஆர் மனோகரன், மணி, அடிலம் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடத்தூர் பஸ் ஸ்டாண்டில், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் முனிராஜ் தலைமையிலும், பாப்பாரப்பட்டி புதிய பஸ் ஸ்டாண்ட் முன், சண்முகம் தலைமையிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அரூர்: அரூர் கச்சேரிமேட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் முல்லைசெழியன் தலைமை தாங்கினார். திமுக மாநில தீர்மான குழு உறுப்பினர் கீரை விஸ்வநாதன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். விசி தகடூர் தமிழ்செல்வன்,ஜானகிராமன், பாரதிராஜா, காங்கிரஸ் கணேசன், முருகேசன், கம்யூனிஸ்ட் குமார், கொமதேகபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மொரப்பூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் தலைமை தாங்கினார். விசி கோவேந்தன், சாக்கன்சர்மா, கலையரசன், தருமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தீர்த்தமலை பேருந்து நிறுத்தம் அருகில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, திமுக ஒன்றிய செயலாளர் சண்முகம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstrations ,parties ,district ,DMK ,
× RELATED போலீசாரிடம் தகராறு: 5 பேர் கைது