×

திசையன்விளை உலக ரட்சகர் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

திசையன்விளை, செப்.26: திசையன்விளை உலக ரட்சகர் திருத்தல 136ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று காலை திருப்பலி நடந்தது. ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர், ஆசிரியர்கள் சிறப்பித்தனர். அர்ச்சிக்கப்பட்ட கொடியை கள்ளிகுளம் அதிசய பனிமாதா திருத்தல அதிபர் ஜெரால்டு ஏற்றினார். நிகழ்ச்சியில் பங்குத்தந்தையர்கள் விக்டர் சாலமோன்(கடகுளம்), லியோன், செல்வமணி, தனிஸ்லாஸ், இன்னாசிமுத்து பங்கேற்றனர். தொடர்ந்து மறையுரையுடன் நற்கருணை ஆசீர் நடந்தது. 2ம் திருவிழாவான இன்று காலை ஆர்.சி.துவக்கப்பள்ளி, உலக ரட்சகர் மேல்நிலைப்பள்ளியினர் சிறப்பிக்கும் திருப்பலியும், மாலை மன்னார்புரம் பங்குத்தந்தை சகாயராஜ் தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.  அக்.3ம்தேதி 9ம்நாள் திருவிழாவை ஆரோக்கிய அன்னை, சகாய அன்னை அன்பியங்கள் மற்றும் பங்கு மேய்ப்பு பணி பேரவை சிறப்பிக்கின்றனர். தென்பாகம் ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பால்ராஜ் தலைமை வகிக்கிறார். மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கும் திருவிழா சிறப்பு மாலை ஆராதனையில் சாத்தான்குளம் மறைவட்ட குருக்கள் பங்கேற்கிறார்கள்.

இரவு 10 மணிக்கு ஆலயத்தை சுற்றி சப்பரபவனி நடக்கிறது.      10ம்நாள் விழாவை புதுநன்மை பெறும் குழந்தைகள், பங்குமக்கள் சிறப்பிக்கிறார்கள். ஆயர் இல்ல தலைமை செயலர் நார்பட் தாமஸ், வடக்கன்குளம் மறைவட்ட முதன்மைகுரு ஜாண்பிரிட்டோ, மறைமாவட்ட தென்பாகம் ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பால்ராஜ் தலைமை வகிக்கிறார்கள். இரவு 7 மணிக்கு ஆலயத்தை சுற்றி சப்பரபவனியும், 9 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. மறுநாள் காலை திருப்பலியும், கொடியிறக்கமும் நடக்கிறது.     ஏற்பாடுகளை திருத்தல பங்குத்தந்தை கிறிஸ்டியான், பங்கு மேய்ப்பு பணிக்குழு, அருட்சகோதரிகள், அன்பியங்கள், பக்தசபைகள், இறைமக்கள் செய்து வருகிறார்கள்.

Tags : Thissayanvilai World Savior Correctional Festival ,
× RELATED ரத்த அழுத்த பரிசோதனை முகாம்