×

சூளகிரியில் ஆடு விற்பனை ஜோர்

சூளகிரி, மார்ச் 19: சூளகிரியில் வாரம்தோறும் புதன்கிழமைகளில் ஆட்டு சந்தை கூடுவது வழக்கம். அதன்படி, நேற்று கூடிய சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான பேரிகை, கும்பளம், கொடி திம்மனப்பள்ளி, அத்திமுகம், கடத்தூர், காமன்தொட்டி, பாத்த கோட்டாவில் இருந்து ஏராளமான ஆடு, கோழிகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கோழிகளுக்கு கொரோனா தாக்குதல் உள்ளது என சமூக வலைத் தளத்தில் பரவிய வதந்தியால் கோழிகள் குறைந்த விலைக்கே விற்பனையானது. ஆனால், ஆடு வழக்கத்தை விட இந்த வாரம் ₹500 முதல் ₹1000 அதிகமாக விலை போனது. இதன்படி 10 கிலோ எடையுள்ள ஆடு ₹5,600-₹9,500 வரையில் விற்பனை செய்யப்பட்டது. இதனை ஏராளமானோர் போட்டி போட்டு வாங்கி சென்றனர். சந்தையில் கூட்டம் அலைமோதியது.

Tags : Goat Sale Jour ,
× RELATED சூளகிரி வட்டாரத்தில் பஸ் வசதியின்றி கிராம மக்கள் அவதி