×

இளம்பெண் மர்மச்சாவு

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 19: பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஜங்காலப்பட்டியை சேர்ந்தவர் தீர்த்தகிரி (35). இவர் கோயமுத்தூரில் பொக்லைன் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இவருக்கு திருமணமாகி பரணி(27) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த ஞாயிற்று கிழமை தீர்த்தகிரி கோவையில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி வந்து சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை தீர்த்தகிரியின் தாய், சின்னத்தாய் விவசாய கிணற்றில் உள்ள மோட்டரில் தண்ணீர் எடுத்து விட சென்றபோது, பரணி கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து, பொம்மிடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Marmachau ,
× RELATED சாத்தான்குளம் வணிகர்கள் மர்மச்சாவு...