×

காரைக்குடியில் குப்பைகளை அள்ளாததால் கேள்விக்குறியாகும் சுகாதாரம்

காரைக்குடி, மார்ச் 18:  காரைக்குடியில் ஒரு வாரமாக குப்பைகளை அள்ளாததால் பொதுமகக்ளின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்திற்க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். ஒவ்வொரு வார்டிலும் 20க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தினசரி வீடு, வீடாக சென்று வண்டிகளில் குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து பின்னர், அதை ஒவ்வொரு வீதிகளிலும் வைக்கப்பட்டிருக்கும் பெரிய குப்பை தொட்டிகளில் குவித்து, லாரிகள் மூலம் காரைக்குடி ரஸ்தா பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டுவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது நகரில் வாரம் ஒருமுறை மட்டுமே குப்பைகளை சேகரிப்பதாத கூறப்படுகிறது. இதனால், தெருக்களில் மலைபோல குப்பை குவிவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். குறிப்பாக காரைக்குடி டி,டி நகரில் தெருவோரம் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகளில் துர்நாற்றம் வீசுவதோடு நாய், மாடுகள் குப்பையை கிளறி, அப்பகுதியில் செல்வோரை அச்சுறுத்துகிறது. இதனால், நகரில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், நகரில் பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை  பணியை காரணம் காட்டி குப்பை லாரிகள் வருவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Tags : Karaikudi ,
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க