×

உலக புத்தக தின விழா

 

காரைக்குடி, ஏப்.24: காரைக்குடி அருகே கல்லலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கிளை சார்பில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. கல்லல் கிளை நூலகர் வசந்தா செல்வி வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார்.

மாவட்டத் துணைத் தலைவர் ராஜூ, மாவட்டப் பொருளாளர் பிரபு, சுப்பிரமணியன், துளிர் இல்ல பொறுப்பாளர்கள் நாகரத்தினம், விஜயலட்சுமி, மருதநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்கள் மத்தியில் புத்தக வாசிப்பினை மேம்படுத்திட வாசிப்பு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. துளிர் திறனறிதல் தேர்வில் கலந்து கொண்ட யஸ்வந்தை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு புத்தங்கள் பரிசாக வழங்கப்பட்டது. கல்லல் கிளை செயலாளர் நித்யா நன்றி கூறினார்.

The post உலக புத்தக தின விழா appeared first on Dinakaran.

Tags : World Book Day ,Karaikudi ,Tamil Nadu Science Movement ,Kallil ,Kallal Branch ,Ms. ,Vasantha ,World Book Day Festival ,
× RELATED காரைக்குடியில் ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை துவக்கம்