×

உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க

 

காரைக்குடி, ஏப். 20: உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு குறித்து டாக்டர்கள் கூறியதாவது, சிறுதானியங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் நுண்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. சிறுதானியங்களில் அதிக அளவில் காணப்படும் மெக்னீசியம், தீவிர ஆஸ்துமா மற்றும் ஒற்றை தலைவலியை தடுக்கிறது.

சிறுதானியங்கள் ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதால் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கின்றன.சிறுதானியங்களில் உள்ள நியாசின் (வைட்டமின் பி3) ரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. அன்றாடம் சிறுதானியங்களைப் பயன்படுத்துவோருக்கு 2ம் வகை (இன்சுலின் சார்ந்த) சர்க்கரை நோய் வருவதில்லை. சிறுதானியங்களை அதிக அளவில் உணவு பயன்பாட்டில் சேர்க்கும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகின்றது.

சிறுதானியப் பயன்பாட்டினால் பெண்களுக்கு பித்தப் பையில் கற்கள் வருவது தடுக்கப்படுகின்றது. அதிக அளவு நார்ச்சத்து மிகுந்த சிறுதானியங்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கின்றன. உடல் பருமன் கொண்டவர்கள் சிறுதானியங்களை பயன்படுத்தும்போது, உடல் எடை சீராகக் குறைகின்றது. எலும்பு வளர்ச்சிக்கும், சராசரி ஆரோக்கியத்திற்கும் சிறுதானியங்கள் பெரிதும் துணைபுரிகின்றன.

The post உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...