×

பையனப்பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி, மார்ச் 18:கிருஷ்ணகிரி ஒன்றியம் பையனப்பள்ளி ஊராட்சியில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு ஏற்பாடுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கை கழுவுதல் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையால் பரிந்துரைக்கப்பட்ட கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. சுகாதார துறை அலுவலரால், கொரோனா வைரசினால் உண்டாகும் நோய் அறிகுறிகள், நோய் பரவும் விதம் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாமகேஸ்வரி, பானுப்ரியா, சுகாதார மேலாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுசேந்திரன், தனித்திறன் உதவியாளர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் அமீர்ஜான், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணகுமார், ஊராட்சி வார்டு உறுப்பினர் செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் மல்லிகா, தூய்மை காவலர்கள் கலந்துகொண்டனர்.

டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்குதொமுச சார்பில் ₹50 ஆயிரம் நிதியுதவிகிருஷ்ணகிரி, மார்ச் 18:கிருஷ்ணகிரி அருகே கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு தொமுச சார்பில் ₹50 ஆயிரம் நிதியுதவியை செங்குட்டுவன் எம்எல்ஏ வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம், குப்பச்சிப்பாறை அருகே கடந்தாண்டு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக இருந்த ராஜா, பணியில் இருந்தபோது அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் டாஸ்மாக் தொமுச சார்பில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமை வகித்து, ராஜாவின் மனைவி தேவியிடம் தொமுச சார்பில் ₹50 ஆயிரம் நிதியுதவியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ராஜாவின் மகன் பார்த்தசாரதி, டாஸ்மாக் தொமுச மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் வேல்முருகன், மாநில துணை செயலாளர் சஞ்சீவன், மாவட்ட துணை செயலாளர் பழனிவேல், சவுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : Corona ,school ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...